Can-Do Samples

< All
Print

INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Cultures

INTERPERSONAL  LISTENING / SPEAKING – Advanced Low

Advanced Low Learners can discuss the effects that lowering the drinking age might have on binge drinking (Cultures).

சமுதாயம் நன்முறையில் இயங்கக் கண்டிப்பான சட்டங்கள் அவசியம் என்பது தெரிந்ததே. அவற்றில் ஒரு சட்டம் மதுக் குடிப்புக்கான குறைந்தபட்ச வயதை வரையறுக்கிறது; பெரும்பாலான மாநிலங்களில் அந்த வரம்பு இப்பொழுது  21 வயது.  அந்த  வரம்பைக் குறைக்கச் சில மாநில அரசுகள் மக்களோடும் நிபுணர்களோடும்  (Experts) ஆலோசனை நடத்திவருகின்றன. அப்படி வயதுவரம்பைக்  குறைப்பதால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கங்கள் என்னவென்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அவற்றை விவரியுங்களேன்!.

Note: This is arguing against a recommendation

சட்டப்படி மதுக்  குடிப்பதற்கான  குறைந்தபட்ச வயது வரம்பை 18 வயதாகக் குறைப்பதால் ஏற்படும் பெருங் குடிப் பழக்கத்தின் மீதான  குறைநிறைகளை நான் அலசிப் பேசப்போகிறேன்.  நிறைகளைச் சொல்வதனாலே நான் அதை ஆதரிக்கிறேன் என்று யாரும் எண்ணவேண்டாம்; எந்தச் சட்டப் பிரச்சினையாக இருந்தாலும் இரண்டுபக்கத்தையும் ஆராய்வது  அவசியமல்லவா? வயது வரம்பைக் குறைத்தால் பெருங்குடிப் பழக்கம் குறையுமென்று பலசமுதாயவியல்  வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் அதிலிருந்து மாறுபடுகிறேன். பள்ளிப் பருவத்தில் குடிப்பதால் படிப்பில் கவனம் சிதறி சீரழிவான பாதைக்குச்  சென்று விடுவார்கள். எனவே இந்த மாற்றம் ஒரு நல்ல வெளிப்பாட்டைத் தராது.

Previous INTERPERSONAL LISTENING/SPEAKING – Advanced Low – Connection
Next INTERPRETIVE READING – Advanced Low – Communication
Table of Contents