INTERPRETIVE READING – Advanced Low – Communication


INTERPRETIVE READING – Advanced low

I can understand an exchange of letters relating to a product malfunction.

வணக்கம் ,

என் பெயர் முகிலன் , நான் கடந்த மாதம் உங்கள் நிறுவனம் புதிதாக அறிமுகப் படுத்திய குளிர் சாதன பெட்டியை இணைய வழியில் ஆர்டர் செய்தேன். நேற்று தான் அது என் வீட்டுக்கு வந்து சேர்ந்தது .

அந்தக் குளிர் சாதன பெட்டியில் பல கீறல்கள் இருக்கின்றன . மேலும் கைப்பிடி உடைந்துள்ளது . உங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொடர்பு எண்ணைப் பல முறை தொடர்புக்கொள்ள முயற்சி செய்தேன் .பயன் இல்லை .

இந்த குளிர் சாதன பெட்டியை எடுத்துக்கொண்டு , மாற்றாக வேறு புதிய குளிர் சாதன பெட்டியைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நான் இதற்கான விநியோக கட்டணம் செலுத்தி இருப்பதால் , நீங்கள் தான் சேதமடைந்தே பெட்டியை எடுத்துச் செல்ல வேண்டும் .

ஆர்டர் விவரம் , ரசீது மற்றும் கீறல்களுடனான புகைப்படத்தை இந்த மின்னஞ்சலுடன் இணைத்துள்ளேன் .

ஒருவாரத்துக்குள்ள இந்த பரிமாற்றத்தை எதிர்பார்க்கிறேன்.

பதிவு எண் :002345

நன்றி

முகிலன்