Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate High – Connection

INTERPERSONAL  SPEAKING – Intermediate High

I can exchange opinions about the use of personal devices at school (Connections)

உன் பள்ளியில் கைப்பேசி போன்ற கருவிகளை மாணவர்கள் பயன்படுத்தக் /புழங்கக் கூடாதென்று கட்டுப்பாடு விதிக்க யோசனையுள்ளது. அதன் தொடர்பாக உன்  பள்ளி நிர்வாகிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடக்கிறது. அப்பொழுது அதை ஆதரித்தோ எதிர்த்தோ எப்படிப்  பேசுவாய்?

சாந்தி: நான் இந்தக் கட்டுப்பாட்டை மிகவும் ஆதரவோடு வரவேற்கிறேன். கைபேசி பெற்றோர்களோடு அவசர தொடர்புக்குத் தேவை என்பதை ஒத்துக்கொள்கிறேன், மறுக்கவில்லை.. ஆனால்,  வகுப்பு நேரங்களில் , மாணவர்கள் கைப்பேசியைப் பெட்டகத்திலேயே  விட்டுவிட வேண்டும். ஏனெனில், பாடங்களில் கவனம் செலுத்த முடியாது.

வள்ளி: வகுப்பறைக்குள் ஏதாவது செயலி பயன்படுத்தி கற்க வேண்டியிருந்தால் கைபேசி உதவும். ஆதலால் வகுப்பில் வைத்துக்கொண்டு தேவையிருப்பின் பயன்படுத்தலாம். அடுத்த வகுப்பறைக்குச் செல்ல அறை எண் கண்டுபிடிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பெட்டகத்திலேயே இருந்தால் இதைப்போன்ற தேவைகளுக்கு பயன்படுத்த இயலாது. 

சாந்தி: அடுத்த வகுப்பறைக்குச் செல்ல கைபேசி அவசியம் இல்லை. வகுப்பறையில் மடிக்கணினியே அனைத்து கற்றலுக்கும் போதுமானது.

வள்ளி: பள்ளிக்கணினியில் அனைத்து செயலியையும் பயன்படுத்த இயலாது. கைபேசி  இணைய வசதியில் எளிதாக செயலியை பயன்படுத்தலாம். 

சாந்தி: இதைப்போன்ற கற்றல் தேவையை ஆசிரியர் அனுமதியுடன் மட்டுமே பயன்படுத்தலாம். மற்ற நேரங்களில் வகுப்பறையில் பயன்படுத்தக்கூடாது. பாடத்தில் கவனம் செலுத்த இயலாது.

வள்ளி: அது சரிதான்,  பாடத்தில் கவனம் செலுத்த முடியாது. ஆனால் முழுமையாக தவிர்க்க முடியாது.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate High – Comparison
Next INTERPERSONAL SPEAKING – Intermediate High – Cultures
Table of Contents