Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate High – Cultures

INTERPERSONAL  SPEAKING – Intermediate High

I can negotiate the exchange of an item I have purchased in a store for another style (Cultures)

Scenario :  உன் தம்பிக்கு வாங்கி வந்த சட்டையை அணிந்து பார்க்கும் போதுதான் அது அவனுக்கு வசதியல்ல/சரியல்ல  என்று தெரிகிறது. அதை  கடைக்கு மீண்டும் கொண்டுபோய் வாடிக்கைச் சேவையாளரிடம் எப்படிப் பேசி இன்னோர் சட்டையை  மாற்றுவாய்?

கடைக்காரர்: வணக்கம்! உங்களுக்கு சட்டை  வேண்டுமா  அல்லது  புடவை  வேண்டுமா?

நான்: வணக்கம். எனக்கு இரண்டும் வேண்டாம்.  

கடைக்காரர்: அப்படியென்றால்  வேறு என்ன  வேண்டும்?

நான் : இந்தச் சட்டையை என் தம்பிக்கென்று இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாங்கினேன். 

கடைக்காரர்: சரி!

நான : அவனுக்குப் போட்டுப் பார்க்கும்போதுதான்  நிறைய பொத்தான்கள்  மாட்டுவது  கடினமாக இருக்கிறது என்று தெரியவந்தது.

கடைக்காரர்: ஓ அப்படியா! மிக வருத்தமே! 

நான்: இப்பொழுது நான் என்ன செய்யலாம்?

கடைக்காரர்: இரசீது  இருந்தால் மாற்றிக் கொள்ளலாம் அல்லது  திருப்பிக் கொடுக்கலாம்..

நான்:  இரசீது என்னிடம் உள்ளது! எனக்கு  மாற்றிக்  கொடுத்தால்  போதும்.

கடைக்காரர்: என்ன  மாதிரியான  சட்டை  வேண்டும்? 

நான்:, தலைவழியாக மாட்டக்கூடிய சட்டைக்கு இதை  மாற்றிக் கொடுங்கள்.

கடைக்காரர்: நீங்கள்  சென்று  மாற்றுச்  சட்டையை எடுத்து  வாருங்கள். பரிமாற்றம் செய்து தருகிறேன். விலை அதிகமிருப்பின் அதற்குரியகூடுதலான பணத்தைச் செலுத்தவேண்டும். 

நான்: கொடுத்து விடுகிறேன். உங்கள் உதவிக்கு நன்றி!

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate High – Connection
Table of Contents