Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate High – Comparison

PRESENTATIONAL  WRITING – Intermediate High

Intermediate Low Learners can write a comparison of school or learning environments and curricula to determine what is valued in my own and other cultures (Comparisons)

இந்திய, அமெரிக்கப்  பாடத்திட்டத்தில் படித்த நீ, இந்த இரண்டு சூழலிலும் சந்தித்த கலாச்சார மாற்றங்கள் என்ன?

என் அப்பா பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்ததால் அமெரிக்காவில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஆகையால் எங்கள் குடும்பம் முழுவதும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தோம். நான் 8ஆம் வகுப்பு வரை இந்தியப் பாடத்திட்டத்தில் படித்தேன். அமெரிக்காவில் 9 ஆம் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பை தொடர்ந்த. நான் பெரும் கலாச்சார மாற்றத்தை சந்தித்தேன். இந்தப் பயணம் எப்படி அமைந்தது என்று பார்க்கலாம். 

இந்தியாவில் தொடக்கப் பள்ளிக்கு பெற்றோர்களுடன் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களுடன் மட்டுமே பாதுகாப்பாக செல்ல முடியும்.  அமெரிக்காவிலோ மாணவர்கள் தனியாக மிதிவண்டியில் செல்வது ஆச்சரியமாக இருந்தது. சாலைகளை கவனமாகக் கடக்க காவலர் உதவி செய்வது என் அச்சத்தைப் போக்கியது. பள்ளியில் சீக்கிரமாகவே எழுத பயிற்சி தந்தார்கள், ஆனால் இங்கோ முதலில் படிக்க ஆரம்பித்து மிகக் குறைவாகவே எழுத்துப் பயிற்சி அளிக்கிறார்கள்.  நடுநிலைப் பள்ளியில் பாடங்கள் படிப்பதிலேயே அதிக நேரம் செலவு செய்வார்கள், விளையாட்டுப் பயிற்சி அளவாகவே இருக்கும். ஆனால் இங்கோ படிப்பும் விளையாடும் சமமாகவோ சில சமயங்களில் விளையாட்டு அதிகமாகவே இருக்கிறது. இந்த அணுகுமுறை எனக்கு கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிந்தது, மாணவர்களோ விளையாட்டில் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள். 

உயர்நிலைப்  பள்ளிக்குச் செல்ல  இந்தியாவில்  மிதிவண்டி, பள்ளிப் பேருந்து, அனைவரும்  செல்லும்  பொதுப்பேருந்து  போன்றவற்றில் செல்லலாம். அமெரிக்காவில் அது போல் செல்ல வழி இருந்தாலும், சிலர் அவர்கஅவர்களுடைய மகிழுந்தில் இயல்பாக வருவது சாதாரண வழக்கமாக இருக்கிறது.  வகுப்புத் தேர்வில் விடைத்தாள்களை மாணவர்களுடனேயே மாற்றிக் கொடுத்து, ஆசிரியர் விடை கூற விடைத்தாள் திருத்தப்படுகிறது. இந்தியாவில் எப்பொழுதும் ஆசிரியரே திருத்துவதைப் பார்த்த எனக்கு இது புதுமையாக இருந்தது. இந்தியாவில் கல்லூரியில் மட்டுமே துறை சார்ந்த பாடங்களை தேர்வு செய்து படிக்கும் முறை உள்ளது.  ஆனால் இங்கு பள்ளிகளிலேயே அப்படித் தேர்வு செய்ய வாய்ப்பு அளிப்பது, கல்லூரியில் எந்தத் துறையை தேர்ந்து எடுக்கலாம் என்பதற்கு ஒரு வழியாக உள்ளது. அமெரிக்கா மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த உடைகளையோ, திறமைகளையோ, படைப்பாற்றலையோ வெளியே காட்டுவதில் தயக்கம் காட்டுவதில்லை. கொஞ்சம் தயக்கத்துடனே செய்வதற்கு பழகியிருந்த எனக்கு இந்த வெளிப்பாடு மிகவும் பிடித்தது. புத்தகம் மட்டுமே வாழ்க்கை என்று கற்றுக் கொண்ட எனக்கு, அதைத் தவிர நம்முள் இருக்கும் திறமைகளுக்கும் நேரம் கொடுத்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்காவில் கற்றுக் கொண்டேன்.

Previous PRESENTATIONAL SPEAKING – Intermediate High – Communication
Next PRESENTATIONAL WRITING – Intermediate High – Connection
Table of Contents