Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate High – Connection

PRESENTATIONAL  WRITING – Intermediate High

Intermediate Low Learners can write advice to younger learners about why to learn an additional language (Connections)

இளவயதில் பன்மொழித்திறன்

இளவயதினர் அவர்களின்  வாழ்க்கையில் பல்வேறு  நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் எதிர்கொள்கிறார்கள். அதற்குத் தேவையான திறன்களை அவ்வயதிலேயே வளர்த்துக் கொள்வது அவசியம். இதில் பல மொழிகளைக் கற்றுக் கொள்வதும் ஒரு சிறந்த திறனாகும். இளவயதில் நேரம், நினைவாற்றல், ஆர்வம் அதிகமாக இருப்பதால் புதிய மொழிகளையோ, கலைகளையோ கற்றுக் கொள்வது மிக எளிது. இதை அவர்களுக்கு உணர்த்தி ஒரு உந்துதலை கொடுத்தால் கற்றுக் கொண்டதன் பயன் வாழ்க்கை முழுதும் கிடைக்கும்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்ற பழமொழி, இளவயதில் உள்ள வேகமும் ஆர்வமும் ஒருவருக்கு வயதாகும்போது குறைந்து விடும் என்ற உண்மையைக் கூறுகிறது. தற்கால வாழ்கை முறையில் ஒருவர் படித்து முடித்தவுடன் தாங்கள் வாழும் நாட்டிலேயே வேறு இடத்திலோ அல்லது அயல் நாட்டிலோ வசிப்பது சாதாரணமாகிவிட்டது. ஒரே மொழி கற்றால் அவர்களுக்கு தேவையான மனஉறுதி வருவதில்லை, பணியிலும் தொய்வு ஏற்பட்டுவிடும். இதனால் வாழ்க்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொள்வது இலக்குகளை அடைய எளிய வழி. எந்த மொழிகளைக் கற்றுக் கொள்வது என்ற கேள்வி எழுந்தால். முதலில் தாய்மொழியைக் கற்றுக் கொள்ளவேண்டும். பிறகு தாங்கள் வசிக்கும் நாட்டிலேயே அதிகமாக பேசப்படும் மொழியைக் கற்கலாம். வெளிநாட்டு மொழிகளில் ஆர்வம் இருந்தால் பரவலாகப் பேசப்படும் ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளையும் கற்கலாம்.

எடுத்துக்காட்டாக ஸ்பானிஷ் மொழியைக் கற்றால் எப்படி நன்மையாக இருக்கும் என்றுப் பார்க்கலாம். முதலில் மொழியின் சொற்கள், உச்சரிப்பு, வாக்கிய அமைப்பு மற்றும் அகராதி இவற்றினைத் தெரிந்து கொள்ளலாம். பாடங்களைப் படிப்பதால் அம்மொழி பேசப்படும் நாடுகளின் பண்பாடு, வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள், உணவு முறையைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். நேரம் கிடைத்தால் அம்மொழி பேசும் ஒரு நாட்டிற்கு சுற்றுலா சென்றால் மக்களோடு உரையாட ஒரு சிறந்த வாய்ப்பு. மேலும் கால சுழற்சிக்கு ஏற்ப அவர்களின் நாடு, வாழ்கை முறைகள் எவ்வாறு மாறியுள்ளன என்பதயும் அறிந்து கொள்ளலாம். புதிய நண்பர்கள் கிடைப்பதுமின்றி கற்றுக் கொண்ட மொழியில் உரையாடவும் இது நல்ல வாய்ப்பு. எனவே பல மொழிகளைக் கற்பதால் எண்ணங்கள், தொலைநோக்கு பார்வை, மனஉறுதி, சிந்திக்கும்திறன் போன்றவை விரிவடையும். ஆகையால் தயக்கம் இல்லாமல் பல மொழிகளைக் கற்பது என்றென்றும் பயன் தரும்.

Previous PRESENTATIONAL WRITING – Intermediate High – Comparison
Next INTERPRETIVE READING – Intermediate High – Comparison
Table of Contents