INTERPRETIVE READING – Intermediate Low – Communication


INTERPRETIVE READING – Intermediate low

I can understand the place, time, and purpose of a meeting discussed in online personal messages.
டேவிட்: காலை வணக்கம் கவி 

கவி: காலை வணக்கம் டேவிட் 

டேவிட்: மே 30ம் தேதி ஒரு நடனப் போட்டி உள்ளதே,!, அதற்கு என் பெயர் கொடுத்தேன். .உன் பெயர் கொடுத்து விட்டாயா ‘ ?

கவி: நான் மறந்தே போய்விட்டேன். நல்ல வேலை நீ ஞாபகப் படுத்தினாய்.  நன்றி. டேவிட் .. இன்று கொடுத்து விடுகிறேன்..

டேவிட்: என்ன பாட்டு, என்ன மாதிரி நடனம் என்பதைப் பேசவேண்டும். எப்போது பார்க்கலாம் ?

கவி: வரும் ஞாயிற்றுக் கிழமை வைத்துக் கொள்ளலாமா ?

டேவிட்: சரி ஞாயிற்றுக் கிழமையே வைத்துக் கொள்ளலாம்.

கவி: எத்தனை மணிக்கு வைக்கலாம் 

டேவிட்:  மதியம் 2 மணிக்கு வைக்கலாம். 

கவி:  எங்கே கூடலாம்?

டேவிட்: வழக்கமாக சூர்யா வீட்டில் தானே இருக்கும். அவனிடம் சொல்லி விடலாம்.

கவி: சரி. அப்போ பார்க்கலாம். 

டேவிட்:  பார்க்கலாம்.