Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Communication

PRESENTATIONAL SPEAKING – Intermediate low

I can describe what I want or need to do on a particular day (Communication)

பள்ளிக்குச் செல்லும் நாட்களில் நீ என்ன செய்வாய்?

எனக்கு பள்ளி செல்லும் நாட்கள்தான் நிறையப் பணிகள் செய்யும் தினமாக இருக்கும். எடுத்துக்காட்டாக திங்கட்கிழமை என்ன செய்வேன் என்று கூறுகிறேன். காலை 5 மணிக்கே எழுந்துவிடுவேன். பல்தேய்த்து, குளித்த பின்னர் உடை அணிந்து கொள்வேன். நான் பேண்ட் இசைக்குழுவில் இருப்பதால் அதற்குத் தேவையான சீருடைகளை முன்நாளே எடுத்து வைத்திருப்பேன். அன்றைய தினத்திற்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் செய்து முடித்த வீட்டுப்பாடங்கள் போன்றவற்றை பையில் போட்டு விடுவேன். எழுதுகோல், பென்சில் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்ப்பேன். அவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டு மேல் மாடியில் உள்ள என் அறையிலிருந்து கீழே வருவேன். பால், ரொட்டி அல்லது சீரியல் போன்றவற்றை சாப்பிடுவேன். இதற்கே 6 மணி போல் ஆகிவிடும். வீட்டிற்கு அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் அது வந்தவுடன் ஏறி பள்ளிக்குச் செல்வேன். 6.30 மணியளவில் பள்ளியில் இறங்கியவடன் சீருடை மாற்றி பேண்ட் பயிற்சிக்குச் தயார் ஆகிவிடுவேன். 7.15 மணிக்கு அது முடிந்துவிடும். உடனே என்னுடைய சாதாரண உடைக்கு மாறிவிடுவேன். 

எல்லா  பொருள்களையும்  எனக்கு கொடுத்துள்ள பாதுகாப்பு  பெட்டியில்  வைத்துவிட்டு 7.45 மணிக்கு  வகுப்பிற்குச்  செல்வேன். அன்றைய  தினத்திற்கான பல்வேறு  வகுப்புகள்  நடக்கும். நடுவில்  கிடைக்கும் உணவு மற்றும்  சிறிய இடைவேளைதான் கொஞ்சம் மற்ற வேலைகள்  செய்ய  முடியும். மதிய  உணவு  உண்ண  நானும்  நண்பர்களும்  சாப்பிடும்  அறைக்குச் செல்வோம். எங்கள் வகுப்பு, பாட  வேலைகள்  எப்படி போகிறது என்று பற்றி  பேசுவோம். வேடிக்கை பேச்சு, மனம்விட்டு சிரிக்க உணவு இடைவேளை ஒரு நல்ல வாய்ப்பாக தினமும்  அமையும். பள்ளி முடிந்தவுடன் மீண்டும் பஸ்சில் வீட்டிற்கு வந்து  சேருவேன். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, கொஞ்சம் சிற்றுண்டி சாப்பிட்டு கால்பந்துப் பயிற்சிக்கு செல்வேன். அந்த  மைதானம் எங்கள்  வீட்டிலிருந்து 15-20 நிமிட தூரத்தில் உள்ளது. எனவே நானே மகிழுந்து ஒட்டி அங்கு சென்று விடுவேன். 1-2 மணி நேரம் கடுமையான பயிற்சி அளிக்கப்படும். இதில்  பயிற்சி எடுக்கும் அனைவரும் எங்கள் பள்ளி அணியைச் சேர்ந்தவர்கள். எங்கள் அணி பள்ளிக்காக விளையாடுகிறது. போட்டிகளில் எதிர்பார்ப்பு அதிகம் என்பதால் நன்கு விளையாட வேண்டியது மிகவும் அவசியம். இது முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவேன். 

விளையாடிய களைப்புத் தீர நன்றாக குளிப்பேன். இரவு உணவை முடித்த பின்னர் 10-15 நிமிடங்கள் தொலைக்காட்சியைப் பார்த்த பின் என் அறைக்குச் சென்று அன்றைய பாடங்கள், வீட்டுப் பாடம் போன்றவற்றை செய்ய ஆரம்பிப்பேன். இதை முடிக்க 1.30-2 மணி நேரம் ஆகும். சில படங்களில் இருக்கும் கேள்விகளுக்கு தொலைபேசியிலோ, குறுஞ்செய்தியிலோ என் நண்பர்களுடன் பேசிஅந்த வேலையை முடிப்பேன். அப்படியே படுக்கையில் தூங்கி விடுவேன்.

Previous INTERPRETIVE READING – Intermediate Low – Cultures
Next PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Communities
Table of Contents