Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Cultures

PRESENTATIONAL SPEAKING – Intermediate low

I can give a presentation recommending something I like, such as a movie, television show,famous athlete, celebrity or historical figure (Cultures)

உனக்குத் தெரிந்த பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது சரித்திரப் புகழ் பெற்றவர்கள் பற்றி கூறு?

டென்னிஸ் உலகம் எல்லாம் விளையாடப்பட்டு வரும் விளையாட்டு. பிரிட்டன் நாட்டில் புல்தரை மைதானத்தில் விளையாடப்பட்ட இவ்விளையாட்டு பல்வேறு நாடுகளில் விதவிதமான மைதானங்களில் விளையாடப் படுகிறது. பல நாடுகளில் சர்வதேசப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்கும் பெண், ஆண் வீரர்களுக்கு பேரும், புகழும், பெருமளவு பரிசுப் பணமும் கிடக்கிறது. ஆனால் இவ்விளையாட்டின் ஆரமபக் களங்களில் பரிசுப் பணம் பெண், ஆண் வீரர்களிடையே பெரும் வித்தியாசத்தில் வழங்கப்பட்டது. அது எவ்வாறு மாறியது என்பதுப் பற்றி இங்கே பாப்போம். 

1960-65 ஆம் ஆண்டுகளில் பெரும் பாகுபாடுகள்  நிலவியது. பெண், ஆண் என இருபாலரும் விளையாடினார்கள். ஆண்களுக்கோ பெரும் பரிசுப்பணம் கிடைத்தது. பெண்கள் நன்றாக விளையாடினாலும் குறைந்த பரிசுப்பணமே கிடைத்தது.ஒன்றும் செய்ய இயலாத நிலையில் பில்லி ஜீன் கிங் என்னும் பெண் விளையாட்டு வீரர் இந்தப் பிரச்னையை கையில் எடுத்தார். 1970 ஆம் அவர் எழுப்பிய எதிர்ப்புக்கு ஆண்களுக்கு நிகராக பரிசுப் பணம் கிடைக்கும் என்ற சமநிலையை ஏற்படுத்தியது. 1971ஆம் வருடம்  நூற்றாயிரம் டாலர் பரிசுப் பணம் பெற்றார். அவர் திறமைக்குச்சான்று அவரின் பல்வேறு வெற்றிகள்தான். ஆறு முறை விம்பிள்டன்சாம்பியன், நான்கு முறை அமெரிக்க ஓப்பன் சாம்பியன, பல முன்னணி பெண் சாம்பியன்களை போட்டியில் தோற்கடித்தார். ஆண்களுக்கு நிகராக விளையாட முடியும் என்ற கூற்றை நிரூபிக்க 50 வயது ஆண் விம்பிள்டன் சாம்பியனைபோட்டியில் வென்றார். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதற்கு இது  ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். 

பெண்கள் விளையாடும் போட்டிகளில் ஆதரவாளர்கள் பங்கு மிக முக்கியம் என்று அறிந்த அவர் பல வியாபார நிறுவனங்களிடம் பேசி ஆதரவு பெற்றார். இது பெண்களின் பங்கை உணர்த்தியதோடு அவர்களின் திறமையை பிரபலமாக்கியது. இதில் பங்கேற்ற வியாபார நிறுவனங்களும் அவருக்குத் தங்கள்  மேலாண்மைக் குழுவில் இடம் கொடுத்தது. வீட்டு அலுவல்களை மட்டும்தான் பெண்கள் திறம்பட செய்ய முடியும் என்ற கூற்றை மாற்றி பல துறைகளில் ஈடு இணையற்றவர்கள் என்று உலகத்திற்கே செய்தியைப் பரப்பினார். அவரின் உழைப்பே எங்களுக்கு பெரும் வெற்றியை வாங்கித் தந்தது என பல பெண் விளையாட்டு வீரர்கள் அவரைப் பாராட்டினார்கள்.

Previous PRESENTATIONAL SPEAKING – Intermediate Low – Connection
Next PRESENTATIONAL WRITING – Intermediate Low – Comparison
Table of Contents