Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communication

INTERPERSONAL  SPEAKING – Intermediate Mid

I can interact to request a repair service for a broken appliance (Communication)

Scenario: வேலை செய்யாத நுண்ணலை (microwave) அடுப்பை பழுது பார்க்க சேவை மையத்திற்கு எவ்வாறு பேசுவாய்?

வாடிக்கையாளர்: வணக்கம். இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கிய நுண்ணலை அடுப்பு வேலை செய்யவில்லை. 

சேவையாளர்: பற்றுச்சீட்டு இருக்கிறதா? எந்தத் தேதியில் வாங்கினீர்கள்?

வாடிக்கையாளர்: பற்றுச்சீட்டு இருக்கிறது. அதை  மே  மாதம் 10ஆம்  தேதி வாங்கினேன்.

சேவையாளர்: உத்திரவாத காலத்திற்குள்தான் இருக்கிறது. என்ன பிரச்சனை?

வாடிக்கையாளர்:  திடீரென உணவு சூடாகவில்லை. 

சேவையாளர்: அப்படியா? பொத்தான்கள் வேலை செய்கிறதா? வேறு என்ன வேலை செய்கிறது?

வாடிக்கையாளர்:   எல்லா பொத்தான்களும் விளக்கும் வேலை செய்கிறது. சூடாவதற்கான நேரத்தையும் அமைக்க முடிகிறது. ஆரம்பிக்கும் பொத்தானை அழுத்தினால் உள்ளே உணவுத் தட்டு சுற்றுகிறது. நேரம் முடிந்தவுடன் உணவு குளிர்ச்சியாகவே இருக்கிறது.

சேவையாளர்: நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நுண்ணலைப் பாகம் சரியாக வேலை செய்யவில்லைப் போல் தெரிகிறது. 

வாடிக்கையாளர்: ஆம், நானும் அப்படிதான் நினைக்கிறேன். 

சேவையாளர்: உங்கள் புகார் எண் 4109. அதைக்  குறித்து வைத்துக் கொள்ளுங்கள். எங்கள் தொழில் நுட்ப வல்லுநர் குழுவிற்கு உங்கள் புகாரை அனுப்பிவிட்டேன். அவர்கள் உங்களைத் 1-2 நாட்களில் தொடர்பு கொள்வார்கள். 

 வாடிக்கையாளர்: சரி நான் அவர்களோடு பேசிக் கொள்கிறேன். நடவடிக்கைக்கு மிக்க நன்றி.

Previous INTERPRETIVE READING – Intermediate Mid – Cultures
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communities
Table of Contents