Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communities

INTERPERSONAL  SPEAKING – Intermediate Mid

I can exchange opinions about the length of the school day or work week (Communities)

வள்ளி: சாந்தி நீ எந்த உயர்நிலைப் பள்ளியில்  படிக்கிறாய்?

சாந்தி: ஜெபர்சன் உயர்நிலைப் பள்ளியில் படிக்கிறேன். எதற்காக இதைக் கேட்கிறாய்?

வள்ளி: பள்ளி செல்லும் நாட்களில் எவ்வளவு நேரம் செலவாகிறது?

சாந்தி: நான் கல்வி கற்க 8 மணி நேரம் செலவிடுகிறேன் . இதில் மதிய உணவிற்காக 40 நிமிடங்களும், சிறிய இடைவேளைக்காக 10 நிமிடங்களும்  கிடைக்கும். 

வள்ளி: மதிய உணவு, இடை வேளையிலேயே சுமாராக ஒரு மணிநேரம் தீர்ந்து விட்டதே.

சாந்தி: ஆமாம்.  மீதமுள்ள  7 மணி நேரத்தில் பள்ளிப் பாடங்களைப் படிப்போம். ஓவ்வொரு வகுப்பும் 1  மணி நேரம். 5  நிமிடங்களுக்கு  முன்னதாகவே வகுப்பு முடிந்துவிடும்.

வள்ளி: அப்படியா!  அந்த  5  நிமிடங்களில் என்ன  செய்வீர்கள்?

சாந்தி:  அதை ஒரு வகுப்பறையிலிருந்து அடுத்த வகுப்பறைக்குச் செல்வதற்கு பயன்படுத்திக் கொள்வோம். சில சமயங்களில் அதே நேரத்தில் எங்கள் பொருட்கள் வைக்கும்  பெட்டிகள்  இருக்கும் இடத்திற்கும் செல்வோம்.

வள்ளி: அங்கே என்ன செய்வீர்கள்?

சாந்தி: அடுத்த வகுப்பிற்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்வோம்

வள்ளி:வகுப்பு  முடிந்த புத்தகத்தை அங்கே  வைத்துவிட்டு  கையில் பளுவை குறைத்துக் கொள்ளலாம். அது ஒருவகையில் நல்லதுதான்.

சாந்தி: ஆமாம். வகுப்புகள் முடிந்தபின்,  வீட்டுப் பாடத்திற்கு தேவையான புத்தகங்களை எடுத்து வருவோம்.

வள்ளி: இரண்டு மணி நேர வகுப்புகளை இணைய வகுப்புகளாக மாற்றினால் வீட்டிலேயே படிக்கலாம். 

சாந்தி: அதுவும் நல்லதுதான், பள்ளித் தொடங்கும் நேரத்தை மாற்றி அமைத்தால் காலையில் நிதானமாக புறப்படலாம்.

வள்ளி: ஆமாம் அதுவும்  நல்ல யோசனைதான். 

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communication
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Comparisons
Table of Contents