Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Comparisons

INTERPERSONAL  SPEAKING – Intermediate Mid

I can exchange opinions about movies and express whether the original book or the movie is better (Comparisons)

பாலன்: குமரன், உங்களுக்கு கதைகள்  மிகவும் பிடிக்கும் என்று  எனக்குத்  தெரியும்.

குமரன்: ஆமாம் நீங்கள்  கூறுவது  சரி.

பாலன்: அப்பொழுது  புத்தகம் மற்றும் திரைப்படமாக உள்ள ஒரு கதை – இதில் எது நல்ல அனுபவமாக இருந்தது?

குமரன்: ஹாரி பாட்டர், கதைப்  புத்தகமாகவும்,  திரைப்படமாகவும் வந்தது. நான் இரண்டையும் ரசித்தேன். 

பாலன் அப்படியா! கொஞ்சம் விளக்கிக் கூறுங்கள்.

குமரன்:  புத்தகத்தில் அரண்மணையை விரிவாகவும் அழகாகவும் விளக்கி இருந்தார்கள். ஆனால் படத்திலோ ஒரு சில நிமிடங்களில் அது முடிந்துவிட்டது. 

பாலன்: புரிகிறது. புத்தகம்தான்  நன்றாக  இருக்கும்  போல்  உள்ளது. வேறு ஏதாவது கூற  முடியுமா?

குமரன்:  திரைப்படத்தில் மாயாசாலக் காட்சிகளோ கண்ணை விட்டு அகலவே இல்லை. மிகவும் அருமையாக இருந்தது. விஞ்ஞான வளர்ச்சியால் எடுத்த காட்சிகள் புத்தகத்தை மிஞ்சிவிட்டன. 

பாலன்: ஆமாம் திரைப்படங்களில்  இப்போதெல்லாம் சில காட்சிகள் பார்க்கும்போது அருமையாகவும் வியப்பாகவும்இருக்கிறது. 

குமரன்: சரியாகச் சொன்னீர்கள். புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. ஆனால் திரைப்படமோ 3 மணி நேரத்தில் முடிந்து விட்டது. 

பாலன்:முடிவாக உங்கள் கருத்து என்ன?

குமரன் எனக்கு படிக்க மிக விருப்பம். அதனால் புத்தகமே கதையை அருமையாக எடுத்துக் கூறியது. பாலன்: உங்கள்  கருத்துக்கு மிக்க  நன்றி.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Communities
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Connections
Table of Contents