Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Connections

INTERPERSONAL  SPEAKING – Intermediate Mid

I can participate in a conversation with someone about ways to save energy or money (Connections)

நபர் 1: நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாகன  எரிபொருள், தண்ணீர், சமையல் எரிவாயு, மின்சாரம் எல்லாம் விலையேறிவிட்டது. பணம் நிறைய செலவாகிறது.

நபர் 2: செலவாகிறது என்பது உண்மை. ஆனால்  அறிவியல்  வளர்ச்சிகள் நிறைய வந்திருக்கிறதே! 

நபர் 1: அப்படியா. எடுத்துக்காட்டாக  மின்சாரத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்று  கூறுங்கள்.

நபர் 2: இன்றைய வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. இது  உற்பத்தியாகும் இடம் பெரும்பாலும் புறநகர்ப் பகுதியிலேயே இருக்கும். அங்கிருந்து மின்சாரத்தை நகரத்திற்கு கொண்டு வர கட்டமைப்பு வேண்டும். அத்துடன் மின்சாரம் உற்பத்தி செய்ய தேவையான எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது.  எனவே  விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. 

நபர் 1: ஓ இதனால்தான் மின்சாரத்தின் விலை அதிகமாகிறதா… அப்பொழுது நம் செலவை எப்படிக் குறைக்கலாம்?

நபர் 2: மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தும் மின்சாதனங்களை வாங்கி பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக  டங்ஸ்டன் மின்விளக்கை வாங்காமல் எல்ஈடி (ஒளி உமிழ்) மின்விளக்கை பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

நபர் 1: நல்ல யோசனை. எங்கள் வீடு பெரியது. நிறைய விளக்குகள் உள்ளன எல்ஈடி மின்விளக்கு மாற்றினால் அதுவே பண சேமிப்புதான். இதைப் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி. 

மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப விதிகளைக் கொண்டு விளையாடப்படுகின்றன.

பேட்டியாளர்: நல்ல கருத்து. உங்கள் நேரத்திற்கு நன்றி.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Comparisons
Next INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Cultures
Table of Contents