Can-Do Samples

< All
Print

INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Cultures

INTERPERSONAL  SPEAKING – Intermediate Mid

I can exchange ideas about sports in schools in the U.S. vs. other countries (Cultures)

Scenario: விளையாட்டுப் பற்றி ஒரு நேர்காணல்

பேட்டியாளர்: அமெரிக்கப்  பள்ளிகளில் விளையாடும் விளையாட்டுகளை பிற நாட்டுப் பள்ளிகளில்   விளையாடும் விளையாட்டுகளோடு ஒப்பிடு.

நான்: பெரும்பாலான அமெரிக்கப் பள்ளிகளில் கால்பந்து (Soccer), அமெரிக்க கால்பந்து (American football), டென்னிஸ், கூடைப்பந்து, மட்டைப்பந்து (Baseball) போன்ற விளையாட்டுகள் எப்பொழுதும் விளையாடப்படுகின்றன. மற்ற நாடுகள் பற்றி பேசினால் இந்தியாவைப் பார்க்கலாம்.

பேட்டியாளர்: அங்கே என்ன  அதிகம் விளையாடப்படுகின்றன?

நான்: இந்தியாவிலே கால்பந்து, ஹாக்கி (Hockey), மட்டைப்பந்து (Cricket), கபடி போன்ற விளையாட்டுக்கள் எப்பொழுதும் விளையாடப்படுகின்றன. 

பேட்டியாளர்: ஒப்பிட்டு பார்த்ததில் என்ன கண்டீர்கள்?

நான்: கால்பந்து விளையாட்டு மட்டும்தான் இரு நாடுகளிலும் ஒரே மாதிரி விதிகளைக் கடைபிடிக்கின்றனர். 

கபடி இந்தியாவில்  உருவான விளையாட்டு. இது கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை மிகப் பரவலாக விளையாடப்படுகிறது. 

ஹாக்கி இந்தியாவின் தேசிய விளையாட்டு. இந்தியாவின் அணி பல தங்கப்பதக்கங்களை ஒலிம்பிக்சில் வென்றுள்ளது. 

ஆனால் இவையனைத்தையும் விட கிரிக்கெட என்கிற மட்டைப்பந்து மட்டுமே இப்பொழுது பரவலாக விளையாடப்படுகிறது.

பேட்டியாளர்: அமெரிக்க மட்டைப்பந்து விளையாட்டுடன் கிரிக்கெட்டை எப்படி ஒப்பிடலாம்?

நான்: அமெரிக்க மட்டைப்பந்து 9 இன்னிங்ஸ் விளையாடுவார்கள் ஆனால் 4 மணி நேரத்தில் முடிந்து விடும். ஆனால் கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்ஸ் 5 நாட்கள் விளையாடுவார்கள். தற்பொழுது ஒரு நாள் போட்டிகளாகவும், 20/20 போட்டிகளாகவும் விளையாடுகிறார்கள்.

மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அந்தந்த நாட்டிற்கு ஏற்ப விதிகளைக் கொண்டு விளையாடப்படுகின்றன.

பேட்டியாளர்: நல்ல கருத்து. உங்கள் நேரத்திற்கு நன்றி.

Previous INTERPERSONAL SPEAKING – Intermediate Mid – Connections
Next PRESENTATIONAL SPEAKING – Intermediate Mid – Communication
Table of Contents