Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communication

PRESENTATIONAL  WRITING – Intermediate Mid

I can write a simple story about a recent trip, project or childhood memory (Communication)

Experience of learning to ride a bike

மிதிவண்டி பழகிய அனுபவம். 

நான் இரண்டு வயதில் மூன்று சக்கர வண்டி ஓட்டப் பழகினேன். என்னுடைய பிறந்த நாளுக்கு மாமா பரிசாக கொடுத்தார். அதன்பின் நான்கு வயதில் இரண்டு சக்கர வண்டியில் பயிற்சிச்சக்கரத்துடன் ஓட்டப் பழகினேன். பிறகு பயிற்சிச்சக்கரம் இல்லாமல் அப்பாவின் உதவியோடு ஓட்டப் பழகினேன். அதன்பின் நானே ஓட்டினேன். ஆனாலும் சில தடவை விழுந்திருக்கிறேன். ஒரு தடவை சரிவில் விழுந்து விட்டேன். முழங்காலில் நல்ல அடிபட்டு காயமானது. நிறைய இரத்தம் வந்தது. அம்மா மிகவும் பயந்து விட்டார்கள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார்கள். இன்னமும் என் முழங்காலில் அதனால் ஏற்பட்டத் தழும்பு உள்ளது. அதை என்னால் மறக்க முடியாது.

நன்கு ஓட்டப்பழகிய பின் நண்பர்களுடன் பூங்காவிற்கு குழுவாகச் சென்று வருவோம். கோடை நாட்களில் குடும்பத்தில் உள்ள எல்லோரும் மிதிவண்டியை மகிழுந்தில் எடுத்துச் செல்வோம். ஏரியைச் சுற்றி உள்ள பாதையில் ஓட்டிச் செல்வோம். அது மேடு பள்ளமாக இருக்கும், அதனால் ஓட்டுவதற்கு மிகவும் சவாலாக இருக்கும். 

எனக்கு இந்த அனுபவங்களால் மிதிவண்டி ஓட்டுவது எப்பொழுதும் பிடிக்கும்.

Previous PRESENTATIONAL SPEAKING – Intermediate Mid – Cultures
Next PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Communities
Table of Contents