Can-Do Samples

< All
Print

PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Cultures

PRESENTATIONAL  WRITING – Intermediate Mid

I can write my plans for an upcoming family or social event (Cultures)

Planning for mother’s 40th birthday celebration

அம்மாவின் 40 ஆவது பிறந்தநாள்

நானும் தம்பியும் அப்பாவும் சேர்ந்து எப்படி கொண்டாடலாம் என்று அம்மாவிற்குத் தெரியாமல் திட்டமிட்டோம். வெளியூரில் இருக்கும் மாமாவைக் கேட்டு நாளையும் இடத்தையும் தேர்வு செய்தோம். இதைப்பற்றி மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்தோம். அம்மாவிற்கு பிடித்த உணவு வகைகளை குறித்துக் கொண்டோம். அம்மாவிற்கு மிகவும் பிடித்த தங்க நகையை பரிசாக கொடுக்க முடிவெடுத்தோம்.

வெளியூரில் இருந்து வரும் நண்பர்களும் உறவினர்களும் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தோம். பக்கத்தில் உள்ள இரண்டு அப்பாவின் நண்பர்களிடம் கேட்டோம். அவர்களும் ஒப்புக்கொண்டு நான்கு குடும்பங்கள் தங்க உதவினார்கள். மேலும் அருகில் உள்ள விடுதியில் நான்கு அறைகள் பதிவு செய்தோம். எங்கள் வீட்டிலேயே இரண்டு குடும்பங்கள் தங்க வைக்க முடிவெடுத்தோம்.

உள்ளூரில் உள்ள பத்து குடும்பங்களுக்கும் அழைக்க முடிவு செய்தோம்.

இந்த ஏற்பாடுகளை அம்மாவுக்குத் தெரியாமல் செய்வதில் பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

பிறந்தநாள் விழாவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.
Previous PRESENTATIONAL WRITING – Intermediate Mid – Connection
Table of Contents